சுயமரியாதைச் சுடரொளிகள் - அறிமுகம்
அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கம்தான் தமிழ்நாட்டின் வரலாற்றையே மாற்றிய இயக்கம். அதுதான் அறிவுப் புரட்சிக்குப் புதிய தூதன். ஆயிரம் ஆண்டுகளாக தமிழினம் அணிந்திராத அணிகலன்! அவ்வியக்கத்தினை வளர்க்க அய்யா அவர்களுடன் நின்று பணிபுரிந்த சுயமரியாதை இயக்க வீரர்களும் வீராங்கனைகளும் ஏராளம்! ஏராளம்!! அவர்கள் உழைப்புதான் இன்றைய இயக்க வளர்ச்சிக்கு இடப்பட்ட உரம் ஆகும். அத்தகைய வீரர்களைப்பற்றிச் சிறு குறிப்புகள் தொகுக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் கி. வீரமணி