கோவையைச் சேர்ந்த குனியமுத்தூரில், 27.6.1899இல் பிறந்த சதாசிவம் அவர்கள், சுயமரியாதை இயக்கத் தொடக்கக் காலத்திலேயே தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்.
கோவை மாவட்டத்தின் திராவிடர் கழகத் தலைவராகப் பல ஆண்டுக் காலம் பொறுப்பேற்று இயக்க வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். மாநாடுகள் பலவும், எண்ணற்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி, கொள்கைப் பரப்புதலில் வெற்றிகண்டார்.
இயக்கம் நடத்திய போராட்டங்களில் பங்கு கொண்ட இவர் தேசப்பட எரிப்புப் போரில் ஈடுபட்டுச் சிறைவைக்கப்பட்டார்.
‘தந்தை பெரியார் மணிமண்டபம்’ என்று சொந்தப் பணத்தில் அமைத்து அதைப் பயன்படும் நூலகமாக்கிய இவர், மேலும் ஒரு தொடக்கப்பள்ளி நிறுவி, கல்வித் தொண்டும் புரிந்தார்.
தமக்குப் பின்னாலும் தம் துணைவியார் திருமதி. அம்மணியம்மையார் மத்திய திராவிடர் கழக உறுப்பினராக இயக்கத் தொண்டாற்றி வருமளவிற்குக் குடும்பத்தைக் கொள்கைவழி ஒழுகுமாறு செய்தார்.
20.10.1967 அன்று, தம் அறுபத்தெட்டாம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
வாழ்க சதாசிவம்!